Tuesday, April 30, 2024

Tamil Moral stories | freekidzstoriesonline |நிழலின் கதை | Tamil Moral Stories | Short stories in tamil

 நீதிக்கதை


நிழலின் கதை


ஒரு காலத்தில், மரங்கள், ஆறுகள் மற்றும் மலைகள் சூழ்ந்த ஒரு சிறிய கிராமத்தில், விளையாடுவதை விரும்பும் ஒரு மகிழ்ச்சியான சிறுவன் இருந்தான். ஒரு நாள், விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு இருண்ட நிழலைக் கண்டான், அது அவரை வருத்தப்படுத்தியது. உலகம் நிறமற்றதாகவும் மந்தமாகவும் இருப்பதைப் போல உணர்ந்தார், அப்படிப்பட்ட உலகில் அவன் வாழ விரும்பவில்லை.


சிறுவன் அழுவதை ஒரு தேவதை கண்டு என்ன பிரச்சனை என்று கேட்க வந்தது. நிழல் கருமையாகவும் வண்ணமற்றதாகவும் இருப்பதால் தன்னை சோகப்படுத்துகிறது என்று சிறுவன் விளக்கினான். பறவைகள் கீச்சுவதையும் ஆறு ஓடுவதையும் போன்ற உலகின் அழகான விஷயங்களை கவனித்து சுற்றிலும் பார்க்குமாறு தேவதை சிறுவனை கேட்டது.


சூரியனை நோக்கி உட்காருமாறு தேவதை சிறுவனிடம் கூறியது, கிராமம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை சிறுவன் பார்த்தான். வயல்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தன, மற்ற குழந்தைகள் சுற்றி ஓடி, சிரித்து மகிழ்ந்தனர். நிழல் தனக்கு பின்னால் இருப்பதையும் அதில் கவனம் செலுத்த வேண்டியதில்லை என்பதை சிறுவன் உணர்ந்தான். 


நீதி: 

வாழ்க்கை கடினமாக இருக்கும்போதும், விஷயங்கள் வண்ணமயமற்றதாகத் தோன்றினாலும், கவனம் செலுத்த வேண்டிய அழகான ஒன்று எப்போதும் இருக்கும். வாழ்க்கையின் நல்ல விஷயங்களை நாம் பாராட்ட வேண்டும், இருண்ட நிழல்கள் நம்மை கீழே இறங்க விடக்கூடாது

இறைவன் மேல் முழு நம்பிக்கை வேண்டும் | Have Full Faith In God | Tamil Moral stories | freekidzstoriesonline

 இறைவன் மேல் முழு நம்பிக்கை வேண்டும் | Have Full Faith In God | Tamil Moral Stories

ஓர் ஆற்றங்கரை அருகே சிறுகுடிசை ஒன்றை கட்டிக்கொண்டு அதில் பால்காரி ஒருத்தி வசித்து வந்தாள். அவளிடம் சில பசுக்கள் இருந்தன. அவற்றிலிருந்து கிடைக்கும் பாலை அடுத்த ஊரில் விற்று, அதனால் கிடைக்கும் சின்ன வருவாயில் அவள் வாழ்ந்து வந்தாள். 


அந்த ஆற்றின் மறு கரையில் ஒரு கோயில் இருந்தது. அந்த கோயில் குருக்கள் சுவாமி அபிஷேகத்திற்காக நாள் தோறும் பால் கொண்டு வந்து கொடுக்குமாறு அந்த பால்காரியிடம் கூறியிருந்தார். 


பால்காரியும் ஒரு படகின் மூலம் மறு கரைக்கு வந்து குருக்களிடம் பால் கொடுத்து வந்தாள். அந்த பால்காரி இறைவனின் திருப்பெயரை எப்பொழுதும் உச்சரித்த படியும், அவரிடம் முழு நம்பிக்கை வைத்திருந்தாள். 


தன்னை எந்த நிலையிலும் இறைவன் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை அவளை சுறுசுறுப்பாக இயங்க வைத்தது. கோயில் குருக்களுக்கு இறைவனிடம் பரிபூரண பக்தி கிடையாது. ஏதோ கடமைக்காக இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வந்தார்

ஆனால் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதில் வல்லவராக இருந்தார். ஒரு முறை படகு காரன் தாமதம் செய்ததனால் அவள் குறிப்பிட்ட நேரத்திற்கு பால் கொண்டு வந்து கோவில் குருக்களிடம் கொடுக்க முடியவில்லை. 


குறித்த நேரத்திற்கு அவள் பால் கொண்டு வந்து கொடுக்காததால் கோயில் குருக்கள் அவள் மேல் கோபப்பட்டு, “ஏன் தாமதம்?” என்று கேட்டார். அதற்கு அந்த பால்காரி, “படகுக்காரன் தாமதமாக வந்து படகை எடுத்ததால் தான் தாமதம் ஆயிட்டு” என்றாள். 


அதற்கு அந்த கோவில் குருக்கள், “பெண்ணே, இறைவனின் மேல் முழு நம்பிக்கை வைத்து அவருடைய திருப்பெயரை கூறினால் பிறவி என்னும் பெருங்கடலையே தாண்டி விடலாம். அப்படி இருக்கும்போது உன்னால் இந்த  சிறிய ஆற்றை கூடவா கடக்க முடியவில்லை” என்று கேலியாக பேசினார். 


மறுநாள் முதல் சுவாமி அபிஷேகத்திற்கு குறித்த நேரத்தில் பால் கிடைத்து வந்தது. ஆற்றில் பெருவெள்ளம் வந்தாலும் கூட பால்காரி மட்டும் குறித்த நேரத்திற்கு வந்து பால் கொடுத்து வந்தாள். 


இது கோவில் குருக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர் பால்காரியை பார்த்து “பெண்ணை, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் கூட அபிஷேக பாலை குறித்த நேரத்தில் கொண்டு வந்து கொடுத்து விடுகிறாயே இது எப்படி?” என்று கேட்டார். 


அதற்கு அந்த பால்காரி, “சுவாமியே, நீங்கள் கூறிய படியே இறைவன் மேல் முழு நம்பிக்கை வைத்து அவருடைய திருப்பெயரை சொல்லிக் கொண்டே ஆற்றை கடந்து வருகிறேன்” என்றாள்.


தான் விளையாட்டாக சொன்னதை பால்காரி கடைபிடிக்கிறாள் என்று எண்ணிய அவர், இறை நம்பிக்கையாவது அவளை காப்பாற்றுவதாவது என்று சந்தேகப்பட்டு அந்த பால்காரியை பின் தொடர்ந்து வந்தார். 


“நீ எவ்வாறு ஆற்றை கடந்து வருகிறாய்? என்பதை எனக்கு காட்டுவாயா” என்றார். பால்காரி அவரை அழைத்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு சென்றாள். இறைவன் மேல் முழுநம்பிக்கை வைத்து இறைவனுடைய திருப்பெயரை சொல்லிக் கொண்டே ஆற்றின் மேல் நடந்து சென்றாள். 


கோயில் குருக்கள் தாமும் அப்படியே செய்ய எண்ணி இறைவனின் முழு நம்பிக்கை இல்லாமல் வெறுமனே வாயால் இறைவனுடைய திருப்பெயரை சொல்லிக்கொண்டே ஆற்றில் இறங்கினார். 


அவ்வளவுதான் அவர் நீருக்குள் மூழ்கினார். உடனே பால்காரி வந்து அவரை காப்பாற்றி கரை சேர்த்தாள் அவள் கோயில் குருக்களை பார்த்து, “சுவாமி இறைவன் மேல் முழு நம்பிக்கை இல்லாமல் வெறுமனே வாயால் அவர் திருப்பெயரை உச்சரிப்பதால் பயணம் இல்லை” என்றாள். கோயில் குருக்கள் தலை குனிந்தார்.


 நீதி : இறைவன் மேல் முழு நம்பிக்கை வைத்து அவருடைய திருப்பெயரை நாம் உச்சரித்தால் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இறைவன் நம்மை காப்பாற்றுவார். எனவே, நாம் இறைவன் மேல் நம் முழு நம்பிக்கையை வைப்போம்.

Wednesday, April 17, 2024

நீதிக்கதை | விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும். Moral Stories in Tamil

 நீதிக்கதை


விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்.


அடர்ந்த வனப் பகுதியில் தனது ஆட்டு மந்தையை மேய்ச்சலுக்கு விட்டு, விட்டு ஒரு மரத்தின் அடியில் காணப்பட்ட நிழலில் உறங்கிக் கொண்டு இருந்தான் ஒரு இடையன்.


அப்பொழுது வானத்தில் ஒரு கழுகு தனது இரையைத் தேடியபடி வட்டமிட்டுக் கொண்டு இருந்தது. அந்தக் கழுகு இந்த இடையனின் ஆட்டு மந்தையில் இருந்த ஒரு ஆட்டுக் குட்டியை கண்டது. அதனைப் பார்த்த மாத்திரத்தில் விரைந்து வந்து அதனை தூக்கிக் கொண்டு பறந்தது.


இந்தக் காட்சியை வெகு நேரமாக ஒரு காகம் பார்த்துக் கொண்டு இருந்தது. கழுகைப் போலவே செயல்பட்டு தானும் அந்த மந்தையில் இருக்கும் ஆட்டுக் குட்டிகளில் ஒன்றை தூக்கி வர வேண்டும் என விருப்பம் கொண்டது. ஆனால், கழுகின் சக்தி என்ன, தனது சக்தி என்ன என்பதை அந்தக் காகம் சிந்திக்க மறந்தது.


இடையனோ நல்ல நித்திரையில் இருந்தான்.


அந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி அந்தக் காகம் ஆட்டு மந்தைக்குள் விரைந்து புகுந்தது. ஒரு சிறு ஆட்டுக் குட்டியை தேர்ந்தெடுத்து அதன் மேல் அமர்ந்து தனது நகம் கொண்டு அதனை பலமாகப் பற்ற நினைத்தது. எனினும், 


அந்த ஆடு ஒரு குட்டி ஆடாகவே இருந்தாலுமே கூட, அதன் ரோமம் மிகவும் அடர்த்தியாக இருந்ததால் அந்தக் காகத்தால் அந்த ஆட்டை பற்றிக் கொள்ள இயலவில்லை. 


பிறகு மிகவும் சிரமப்பட்டு தனது நகங்களை மெல்ல அதன் ரோமங்களுக்குள் விட்டு பற்றிக் கொண்டது. ஆனால், ஆட்டுக் குட்டி மிகவும் கனமாக இருந்ததால் அந்தக் காகத்தால் அதனை தூக்க முடியவில்லை. 


அதனால் தப்பித்தால் போதும் என அந்த ஆட்டுக் குட்டியை விட்டு, விட்டுப் பறந்து செல்ல நினைத்தது.


ஆனால், அந்தக் காகத்தின் கால்கள் அந்த ஆட்டுக் குட்டியின் ரோமங்களில் நன்றாக சிக்கிக் கொண்டதால், காகம் தனது கால்களை வெளியே எடுக்க முயற்சி செய்யும் போது அந்த ஆட்டுக் குட்டிக்கு வலி எடுத்தது. 


அதனால் அந்த ஆட்டுக் குட்டி கத்தியது. காகமும் தப்பிக்க முடியாமல் வசமாக மாட்டிக் கொண்டு கரைந்தது. இதனால் அந்த ஆட்டு மந்தைகளில் இருந்த அனைத்து ஆடுகளும் நடப்பது அறியாது பயம் கொண்டு கனைத்தது. இதனால் அந்த இடமே பேர் இரைச்சல் அடைந்தது.


இடையன் இந்தப் பேர் இரைச்சலைக் கேட்டு, "தனது ஆடுகளுக்கு என்ன நேர்ந்ததோ!" என்று பயந்து கண் விழித்துக் கொண்டான். பிறகு அவன் நடந்ததை அறியாது சுற்றி, சுற்றி என்ன ஏது என்று பார்த்தான். 


உடனே தனது ஆட்டை நகங்களால் காயப்படுத்திக் கொண்டு இருந்த அந்தக் காகத்தை கண்டான். அத்துடன் அவ்விடம் நோக்கி விரைந்து ஓடி வந்தான். பிறகு தனது தடியால் அந்தக் காகத்தை அடித்தே கொன்றான்.


பாவம் அந்தக் காகம் தனது சக்திக்கு மீறிய செயலைச் செய்யப் போய் பரிதாபமாகத் தனது உயிரை விட்டது.


நீதி: எப்போதுமே விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்.


Recent Posts

Popular Posts