நீதிக்கதை
தங்க அன்னத்தின் கதை!
ஒரு காலத்தில், ஒரு குளத்தில் பொன் அன்னம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் குளத்தின் அருகே, தாய் மற்றும் இரண்டு மகள்கள் என வறுமையில் வாழ்ந்த ஒரு குடும்பம் இருந்தது. அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பாடு சாப்பிடுவதே கஷ்டமாக இருந்தது. ஒரு நாள், அந்த அன்னம் அவர்களின் நிலைமையைக் கவனித்து, அந்த ஏழை குடும்பத்திற்கு உதவ முடிவு செய்தது. தனது பொன்னை போன்ற இறகுகளை ஒவ்வொன்றாகக் கொட்டி, அவற்றை விற்று வாழ்வாதாரம் நடத்த அந்தக் குடும்பத்திற்கு கொடுக்க ஒரு திட்டத்தை வகுத்தது.
அன்னம் தங்கள் வீட்டிற்கு வந்து தனது பொன்னிறகங்களை கொடுப்பதாகச் சொன்னபோது, அந்தத் தாய் ஆச்சரியப்பட்டாள். அன்றிலிருந்து, அன்னம் தினமும் தனது இறகுகளை உதிர்க்கத் தொடங்கியது, அதன் மூலம் அந்தக் குடும்பம் சந்தோஷமாகவும் வசதியாகவும் வாழ போதுமான வருமானத்தை ரூடுவு;ட்டத் தொடங்கியது. ஆனால், அந்தத் தாய் பேராசை பிடித்து, அடுத்த முறை அன்னம் தங்கள் வீட்டிற்கு வரும்போது அதன் எல்லா இறகுகளையும் பறித்து விட முடிவு செய்தாள்.
அந்தத் தாய் அன்னத்தின் இறகுகளைப் பறித்தபோது, அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஏனென்றால், அவை இனி பொன்னிறமாக இல்லை, சாதாரமான இறகுகளாகவே இருந்தன. தான் மனமுவந்து தன் பொன்னிற இறகுகளை கொடுத்ததாகவும், தாய் தன்னை வலுக்கட்டாயாகப் பறித்ததால், இறகுகள் இனி அதே மாதிரி இருக்காது என்றும் அன்னம் விளக்கம் அளித்தது. தாய் அன்னத்திடம் மன்னிப்பு கேட்டாள், ஆனால் அன்னம் அதே தவறை மீண்டும் செய்ய மறுத்துவிட்டு, பேராசைப்பட வேண்டாம் என்று அந்தக் குடும்பத்திடம் கேட்டுக்கொண்டு பறந்து போய்விட்டது.