என் மதிப்பு
ஒரு நாள் மகன் தந்தையிடம் கேட்கின்றான் என்னுடைய வாழ்க்கையின் மதிப்பு என்னவென்று அதற்கு தந்தை அவனின் கையில் ஒரு கல்லை கொடுத்து இதை சந்தைக்கு எடுத்து செல் அங்க யாராவது இதனை வாங்க கேட்டால் ஒரு பதிலும் சொல்லாதே இரண்டு விரல்களை மட்டும் காண்பி என்றார்.
அதேபோல மகன் அதனை சந்தைக்கு எடுத்து சென்றான் அதனை ஒரு வயது முதிர்ந்த பெண் பார்த்து விட்டு அதன் விலை என்னவென்றால் அவன் இரண்டு விரல்களை காண்பித்தான்.
அப்பெண் இதன் விலை 2 ரூபாய்களா? என்றால் உடனே அந்த பையன் தந்தையிடம் வந்து நடந்ததை கூறினான் தந்தை நீ இப்போ இதனை விலை உயர்ந்த கற்கள் விற்கும் கடைக்கு எடுத்து செல் என்றார்.
மகனும் அதனை அக்கடைக்கு எடுத்துச்சென்றான் கடைக்குள் அவன் சென்று பார்த்தபோது கடையின் விற்பனை தளத்தில் இருந்த மிகவும் வயது முதிர்ந்தவர் அக்கல்லை பார்த்து ஆச்சரியப்பட்டு நான் வாழ்நாள் முழுவதும் தேடிய கல்லை நீ வைத்து இருக்கிறாய் இதற்கு என்னவேண்டும் என்று கேட்டார் அந்த பையனும் இரண்டு விரல்களை காண்பித்தான்.
அதற்கு அந்த கடை முதியவர் 200,000 ரூபாய்களா என்று கேட்டார் உடனே பையன் ஓடிவந்து தந்தையிடம் நடந்ததை கூறினான் அதற்க்கு தந்தை கூறினார் மகனே நீ இப்போது 2 ரூபாய் மதிப்புயானவனாக இருக்கப்போகிறீயா? இல்லை 200,000 ரூபாய் மதிப்புயானவனாக இருக்கப்போகிறீயா?
சிலர் உன்னை நேசிப்பார்கள் அவர்களுக்கு நீதான் எல்லாமாக இருப்பாய். அப்போது உன் மதிப்பு விலைமதிப்பற்றது. சிலர் உன்னை பயன்படுத்தி விட்டு மறந்து விடுவார்கள் அவர்களுக்கு நீ ஒரு தேவையற்ற பொருள். எனவே, நீ தான் முடிவு செய்ய வேண்டும் உன்
வாழ்க்கையின் மதிப்பை.
No comments:
Post a Comment