Wednesday, February 28, 2024

நீதிக்கதை சொர்க்கமும் நரகமும் Moral stories for kids Moral stories in tamil,

 நீதிக்கதை


சொர்க்கமும் நரகமும்


ஒரு ஊரில் ஒரு மிகப் பெரிய பணக்காரன் இருந்தான். ஆனால் என்ன பயன்? யாருக்கும் ஒன்றுமே கொடுத்து உதவாத ஒரு கருமியாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு


சொர்க்கத்தையும் நரகத்தையும் காண வேண்டும் என்று மிகுந்த ஆசை.


ஒருநாள் உறங்கும் பொழுது அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனது ஆசை அறிந்து அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். 


அவர் சொற்படியே அவருடன் சென்றான் அந்தக் கருமி. முதலில் அவனை எங்கு அழைத்துச் சென்றார் தெரியுமா? அவனை நரகத்திற்குக் கூட்டிச் சென்றார். அவர்கள் சென்றபோது அங்கு உணவு உண்ணும் நேரமாக இருந்தது. 


பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவை மிக்க பல பதார்த்தங்களும் யாவும் இருந்தன. அவரவர்களுக்கு சாப்பிட தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு கூட பரிமாறப்பட்டது. 


அந்த உணவைக் கண்டவுடன் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால் அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்கவே முடியவில்லை, 


தவிர கையை மடக்கி வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்லக் கூட முடியவில்லை. பரிதாபமான நிலையில் அவர்கள் இருந்தார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது இதுதானோ?


அறுசுவை உணவு எதிரே இருந்தால் கூட அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு அவற்றில் உள்ள உணவை வீணாக்கிவிட்டனர். பின்னர் தாங்க முடியாத பசியினால் கீழே உட்கார்ந்து அழுதார்கள். இது தினமும் நடக்கும் சம்பவம்.


பிறகு அந்த பெரியவர் அந்தப் பணக்காரனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதே போல உண்ணும் வேளைதான். 


நரகத்தில் இருந்தது போலவே அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடுகள் எல்லாம் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.


அங்கிருந்தவர்களுக்குக் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கு அருகே கொண்டு செல்வதற்காக அவர்கள் கையை மடக்கமுடியவில்லை. நீட்டியபடியே இருந்தது. ஆனால் அவர்களுக்கு உக்தி தெரிந்தது. நீட்ட முடியும் ஆனால் மடக்கத்தானே முடியவில்லை என்று எண்ணி, ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாய் அருகில் நீட்டி அவருக்கு ஊட்டினார். 


மடக்கத்தானே முடியாது கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாம் அல்லவா? எவ்வளவு சாமர்த்தியம்? இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது. எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர்.


இத் தருணத்தில் கருமி கனவில் இருந்து மீண்டான். சொர்க்கம் என்பது தனியே எங்கும் கிடையாது. ஒருவருக் கொருவர் உதவி செய்து வாழ்வதையே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான்.


யாவருக்கும் பகிர்ந்து உண்ணாமல் தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது தான் நரகம் என்பதையும் உணர்ந்து கொண்டான்.


அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான். 


அதனால் நாமும் பலருக்கு அவர்கள் தேவை புரிந்து பல நன்மைகள் புரிந்தால் நாம் சொர்க்கத்தை இந்த வாழ்விலேயே கண்டுவிடலாம்.

Sunday, February 25, 2024

நீதிக்கதை தற்பெருமை வேண்டாம்

 நீதிக்கதை


 தற்பெருமை வேண்டாம்


காட்டில் சிங்கம் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தது. அப்பொழுது, அதன் அருகே உள்ள மரக்கிளையில் ஒரு சேவல் ஏறி அமர்ந்திருந்தது.


அதுவரை சும்மா இருந்த சேவல் "கொக்கரக்கோ" எனக் கூவ ஆசைப்பட்டு, உடன் சத்தமாகக் கூவியது.


சேவலின் கொக்கரக்கோ சத்தம் கேட்டதும், நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்த சிங்கம் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தது.


ஒருவரையும் காணவில்லை. ஆதலால் மறுபடியும் படுத்துத் தூங்கியது. சிங்கம் படுத்துத் தூங்கிய சிறிது நேரத்தில் மறுபடியும் சேவல் கூவியது.


சேவலின் சத்தத்தில் சிங்கத்தால் தூங்க முடிய வில்லை. கலவரமடைந்து எழுந்த சிங்கம், மரத்தின் மேலே பார்த்தது. சேவல் பெருமையுடன் நின்று கொண்டு இருந்தது.


"ஏய், ஏன் இப்படி காட்டுத் தனமாகக் கத்துகிறாய் என் தூக்கத்தைக் கெடுக்காதே" என எச்சரிக்கை செய்தது


"நான் எவ்வளவு அழகாகப் பாடுகிறேன். என் பாட்டு உனக்குப் பிடிக்கவில்லை என்கின்றாயே. நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். அதனால் பாடிக் கொண்டு தான் இருப்பேன் என்றபடி மீண்டும் கொக்கரக்கோ என அதிக சப்தத்துடன் கூவியது.


அதன் சப்தம் சிங்கத்தின் காதில் மிகவும் கொடூரமாக விழுந்ததால், இனிமேல் என்ன சொன்னாலும் சேவல் கேட்காது என்ற முடிவெடுத்து, இடத்தை மாற்றிக் கொள்வோம் என முடிவு செய்து ஓடியது.


சிங்கம் ஓடும் பொழுது ஒரு கழுதையைப் பார்க்காமல் ஓடியது. ஆனால் கழுதையோ, "சிங்கம் தன்னைக் கண்டு தான் பயந்து ஓடுகிறது" எனக்கூறி கத்தியது.


சிங்கம் காதில் இது விழுந்தவுடன், திரும்பி வந்து கழுதையைத் தாக்கிக் கொன்றது.


நீதி: வீணான தற்பெருமை மனதில் எண்ணக் கூடாது. அப்படி எண்ணுபவர் வேதனை அடைவார்கள்.


Monday, February 12, 2024

" படிப்பு சுமையல்ல...."

 " படிப்பு சுமையல்ல...."

...........................................



மாணவ செல்வங்கள் தங்கள்  பாடங்களை அன்றாடம் படித்து விட்டால் எவ்வளவு பாடம் இருந்தாலும் அது சுமையாகத் தெரியாது. சுகமாகத் தெரியும்.


அத்துடன் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போது கவனத்தை எங்கும் சிதற விடாமல் ஊன்றி கவனிக்க வேண்டும்..


மற்றும் எதையும் சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்க வேண்டும்.ஈடுபாடு என்பது தனித்து திகழ்வது அல்ல. எல்லாவற்றின் மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத் தான் உழைப்பில் ஈடுபாடு பிறக்கும்.


ஒரு கிராமத்தில் அறிஞர் ஒருவர் இளைஞர்களுக்குக் கல்வி போதித்து வந்தார். அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே…


எனவே நிதானமாகவும் அதே சமயம் மாணவர்கள் மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்து வந்தார்.


ஒரு நாள் தன் மாணவர்களைப் பார்த்து, நீங்கள் எல்லோரும் இப்போது படித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.


படிப்பது சுகமானதா? சுமையானதா? என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்று தான் பலரும் சொல்வீர்கள்.


ஆனால் படிப்பதை சுகமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு குட்டிக் கதை சொல்கிறேன்…


ஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றி தன் தோள் மேல் போட்டுக் கொண்டு தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தான்.


ஊரே அவனை பிரமிப்புடன் பார்த்தது. நல்ல பலசாலி என்றது. எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க முடிகிறது என்று பலரும் கேட்டனர்.


ரொம்பவும் சுலபம் என்றான் அவன்.


எப்படி? என்றார்கள் மற்றவர்கள்..


இந்தப் பசு கன்றுக் குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்து கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகி விட்டது. 


இப்படி தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை என்றான்.


இது ஏதோ படிப்பதற்காக உங்களுக்கு சொல்லப்பட்ட கதை அல்ல.படித்தப் பின்னும் உங்களுக்கு உதவும் பாடம்,” என்றார் அந்த அறிஞர்...


ஆம்.,தோழர்களே..,


அனைத்துப் பெற்றோர்களும்,

ஆசிரியர்களும் கூறும் ஒரே புகார் தங்கள் குழந்தையை தம்மால் கட்டுப்படுத்தவே 

முடியவில்லை என்பது தான்.


உங்கள் குழந்தைக்கு உண்மையான பிரச்சனை என்னவென்று கண்டறியுங்கள், 


அவர்கள் எதில் அதிக ஆர்வம் 

செலுத்துகின்றனர், என்ன செய்தால் குழந்தையை திசை திருப்ப முடியும் என்று கண்டறிந்தாலே போதும், அவர்களை சுலபமாக வழிக்குக் கொண்டு வந்து விடலாம்.✍🏼

Tamil moral story🌻தமிழ் குழந்தைகள் கதை🌻கிளியின் நட்பு🌻AN INTRESTING STORY WITH A MESSAGE


 

Thursday, February 1, 2024

The story of justice Do not forget to thank | Moral stories in english | Short stories in english | Deer story Kids stories

 The story of justice


Do not forget to thank


A spotted deer was frolicking happily in forest.


Some of the hunters saw the dot. Today anyway, they wanted to capture this point. They also like deer


He clearly understood that they were coming towards him.


We thought that we should escape from their clutches anyway. Without a moment's delay, it leaped and ran in a four-legged leap. hunters are not letting go either. They followed and ran.


The deer has run a long way. Fatigue prevailed and could not run. I thought it would be better if I went to rest for a while.


It also relaxed a little where it stood. Hearing the sound of people coming, he looked up. The same hunters seem not to let go.


They continued to chase them tirelessly. The sin threw the deer away. They had recently arrived and wondered "how to escape from them".


Beside it the vegetation grew lush and bushy. Entered the bush and quietly hid. Hide in the bush


The fawn was standing motionless.


The Hunters who ran near it, were constantly running in search of the deer. It was only after they left that place that deer felt relieved. She was happy that she had saved her life. It jumped out of the bush.


The spotted deer was already hungry. Just at that time, it came running after seeing the hunters. So to get rid of its hunger, it tasted the green leaves of the bush and grazed.


Not being able to see the deer for a while, the hunters turned back the way they had come. The fawn ran back into the bush to hide from the hunters.


But now bush did not help the baby goat. The reason is that it has eaten all the thick green leaves on the bush. Hence, the fawn could not be hidden by the leaves.


In the eyes of the hunters who came near it

The fawn knew. So he could not run away immediately. Due to this, the fawn woke up trapped by the wolves. "By our hasty wit, we have eaten the leaves that saved our lives."


"The Lord has given punishment for the act of forgetfulness". Tears flowed at the thought.


Justice: Those who forget to give thanks are worse than animals.

न्याय की कहानी धन्यवाद देना न भूलें

 न्याय की कहानी


धन्यवाद देना न भूलें


एक चित्तीदार हिरण कनकम में खुशी से घूम रहा था।


कुछ वाडर्स ने बिंदु देखा। आज वैसे भी वे इस बात पर कब्ज़ा करना चाहते थे. उन्हें हिरण भी पसंद है


वह स्पष्ट रूप से समझ गया कि वे उसकी ओर आ रहे हैं।


हमने सोचा कि हमें किसी भी तरह उनके चंगुल से भागना चाहिए। एक पल की भी देरी किए बिना, वह उछला और चार पैरों वाली छलांग लगाकर दौड़ा। वाडर भी जाने नहीं दे रहे हैं. वे पीछा करके भागे।


हिरण बहुत दूर तक भाग चुका है। थकान हावी हो गयी और दौड़ नहीं सका. मैंने सोचा कि अगर मैं कुछ देर आराम कर लूं तो बेहतर होगा।


जहां वह खड़ा था वहां उसे थोड़ा आराम भी मिला। लोगों के आने की आहट सुनकर उसने ऊपर देखा। वही वाडर्स जाने नहीं दे रहे हैं।


वे लगातार उनका पीछा करते रहे। पाप ने हिरण को फेंक दिया। वे हाल ही में आये थे और सोच रहे थे कि "उनसे कैसे बचा जाए"।


इसके बगल में वनस्पति हरी-भरी और झाड़ीदार हो गई। अपुधार में घुसकर चुपचाप छिप गया। झाड़ी में छिप जाओ


हिरण का बच्चा निश्चल खड़ा था।


इसके पास दौड़ने वाले वडार लगातार हिरण की तलाश में दौड़ रहे थे। उनके वहां से चले जाने के बाद ही मान को राहत महसूस हुई। वह खुश थी कि उसने अपनी जान बचा ली। वह झाड़ी से बाहर कूद गया।


चित्तीदार हिरण पहले से ही भूखा था। उसी समय वह वाडरों को देखकर दौड़ता हुआ आया। इसलिए अपनी भूख मिटाने के लिए उसने झाड़ी की हरी पत्तियों को चखा और चरने लगा।


कुछ देर तक हिरण को न देख पाने के कारण शिकारी जिस रास्ते से आये थे उसी रास्ते से वापस लौट गये। हिरण का बच्चा शिकारियों से छिपने के लिए वापस झाड़ियों में भाग गया।


लेकिन अब अपुदार ने बकरी के बच्चे की मदद नहीं की। इसका कारण यह है कि इसने झाड़ी की सारी मोटी हरी पत्तियाँ खा ली हैं। अत: हिरण का बच्चा पत्तों से छिप नहीं सका।


इसके निकट आने वाले जलपरियों की दृष्टि में

हिरण का बच्चा जानता था. इसलिए वह तुरंत भाग नहीं सका. इससे हिरण का बच्चा भेड़ियों के जाल में फँसकर जाग उठा। "अपनी जल्दबाजी की बुद्धि से, हमने वे पत्तियाँ खा लीं जिनसे हमारी जान बच गई।"


"प्रभु ने भूलने के कृत्य का दण्ड दिया है।" यह सोच कर आँसू बह निकले।


जस्टिस: जो लोग धन्यवाद देना भूल जाते हैं, वे जानवरों से भी बदतर हैं।

நீதிக்கதை செய் நன்றி மறவாதே | kidzstoriesonline | bedtime stories | 1000 moral stories

 நீதிக்கதை


செய் நன்றி மறவாதே


கானகத்தில் புள்ளிமான் ஒன்று மகிழ்ச்சியாக துள்ளித் திரிந்து கொண்டிருந்தது.


வேடர்கள் சிலர் புள்ளிமானைப் பார்த்து விட்டனர். இன்று எப்படியும், இந்தப் புள்ளிமானை பிடித்து விட வேண்டும் என நினைத்தனர். அவர்களும் மான்குட்டியைப் பிடிக்கும்


நோக்கில் தம்மை நோக்கித் தான் வருகிறார்கள் என்றும் தெளிவாகப் புரிந்து கொண்டது.


நாம் அவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் எப்படியும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தது. சிறிதும் தாமதியாமல் நான்கு கால் பாய்ச்சலில் துள்ளிக் குதித்து ஓடியது. வேடர்களும் விடுவதாய் இல்லை. தொடர்ந்து பின்பற்றி ஓடி வந்தார்கள்.


நீண்ட தூரம் ஓடி வந்துவிட்டது மான்குட்டி. களைப்பு மேலிட மேலும் அதனால் ஓடவும் முடியவில்லை. சற்று இளைப்பாற்றிச் சென்றால் தான் நல்லது எனவும் நினைத்தது.


அதே போல் நின்ற இடத்திலேயே சற்று இளைப்பாறியது. ஆட்கள் வரும் சப்தம் கேட்டு, எழுந்து பார்த்தது. அதே வேடர்கள் தம்மை விடுவதாக இல்லை போலிருக்கிறது.


தொடர்ந்து அயராமல் விரட்டிக் கொண்டும் வந்து விட்டார்கள். பாவம் மான் குட்டிக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர்கள் சமீபத்தில் வந்து விட்டார்களே "எப்படித் தப்புவது அவர்களிடம்" என்றும் யோசித்தது.


அதன் அருகில் தாவரங்கள் பசுமையால் வளர்ந்து புதர் போல் மண்டிக் கிடந்தன. அப்புதருக்குள் நுழைந்து அமைதியாக ஒளிந்து கொண்டது. புதருக்குள் ஒளிந்து


கொண்ட மான் குட்டி அசைவற்று அமைதியாக நின்று கொண்டிருந்தது.


அதன் அருகில் ஓடி வந்த வேடர்கள், தொடர்ந்து மானைத் தேடி ஓடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றதும் தான், மானுக்கு நிம்மதி வந்தது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டோம் என மகிழ்ச்சி அடைந்தது. துள்ளிக் குதித்து புதருக்கு வெளியே வந்தது.


புள்ளிமான் குட்டி ஏற்கனவே பசியோடு இருந்தது. அச்சமயத்தில் தான் வேடர்களைப் பார்த்துவிட்டு தலை தெறிக்கவும் ஓடி வந்தது. எனவே அதன் பசிக் களைப்பு நீங்க, அந்தப் புதரிலுள்ள பசுமையான இலைகளையே ருசித்து மேய்ந்து விட்டது.


சற்று நேரத்தில் மானைக் காண முடியாமல், வேடர்கள் வந்த பாதையிலேயே திரும்பினார்கள். வேடர்கள் பார்வையில் படக்கூடாதென, மீண்டும் புதருக்குள் ஓடி ஒளிந்தது மான்குட்டி.


ஆனால், இப்பொழுது அப்புதர் மான்குட்டிக்கு உதவவில்லை. காரணம் புதரில் இருந்த அடர்ந்த பசுமையான இலைகளையெல்லாம் தான், அது தின்று விட்டதே. எனவே, மான்குட்டியை இலைகளால் மறைக்க முடியவில்லை.


அதன் அருகில் வந்த வேடர்கள் கண்களில்

மான்குட்டி தெரிந்தது. அதனால் உடனே தப்பித்து ஓட முடியவில்லை. இதனால், வேடர்களிடம் மாட்டிக் கொண்டு மான்குட்டி விழித்தது. "நம் அவசர புத்தியால் தானே, நம் உயிரைக் காப்பாற்றிய இலைகளைத் தின்று விட்டோம்."


"நன்றி மறந்து செய்த செயலுக்கு ஆண்டவன் தண்டனை தந்து விட்டாரே". என எண்ணி கண்ணீர் வடித்தது.


நீதி : செய் நன்றி மறந்தவர்கள் மிருகங்களை விட மோசமானவர்கள்.


நீதிக்கதை தற்பெருமை வேண்டாம்

 நீதிக்கதை


 தற்பெருமை வேண்டாம்



காட்டில் சிங்கம் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தது. அப்பொழுது, அதன் அருகே உள்ள மரக்கிளையில் ஒரு சேவல் ஏறி அமர்ந்திருந்தது.


அதுவரை சும்மா இருந்த சேவல் "கொக்கரக்கோ" எனக் கூவ ஆசைப்பட்டு, உடன் சத்தமாகக் கூவியது.


சேவலின் கொக்கரக்கோ சத்தம் கேட்டதும், நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்த சிங்கம் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தது.


ஒருவரையும் காணவில்லை. ஆதலால் மறுபடியும் படுத்துத் தூங்கியது. சிங்கம் படுத்துத் தூங்கிய சிறிது நேரத்தில் மறுபடியும் சேவல் கூவியது.


சேவலின் சத்தத்தில் சிங்கத்தால் தூங்க முடிய வில்லை. கலவரமடைந்து எழுந்த சிங்கம், மரத்தின் மேலே பார்த்தது. சேவல் பெருமையுடன் நின்று கொண்டு இருந்தது.


"ஏய், ஏன் இப்படி காட்டுத் தனமாகக் கத்துகிறாய் என் தூக்கத்தைக் கெடுக்காதே" என எச்சரிக்கை செய்தது


"நான் எவ்வளவு அழகாகப் பாடுகிறேன். என் பாட்டு உனக்குப் பிடிக்கவில்லை என்கின்றாயே. நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். அதனால் பாடிக் கொண்டு தான் இருப்பேன் என்றபடி மீண்டும் கொக்கரக்கோ என அதிக சப்தத்துடன் கூவியது.


அதன் சப்தம் சிங்கத்தின் காதில் மிகவும் கொடூரமாக விழுந்ததால், இனிமேல் என்ன சொன்னாலும் சேவல் கேட்காது என்ற முடிவெடுத்து, இடத்தை மாற்றிக் கொள்வோம் என முடிவு செய்து ஓடியது.


சிங்கம் ஓடும் பொழுது ஒரு கழுதையைப் பார்க்காமல் ஓடியது. ஆனால் கழுதையோ, "சிங்கம் தன்னைக் கண்டு தான் பயந்து ஓடுகிறது" எனக்கூறி கத்தியது.


சிங்கம் காதில் இது விழுந்தவுடன், திரும்பி வந்து கழுதையைத் தாக்கிக் கொன்றது.


நீதி: வீணான தற்பெருமை மனதில் எண்ணக் கூடாது. அப்படி எண்ணுபவர் வேதனை அடைவார்கள்.


Recent Posts

Popular Posts